Monthly Archives: May 2017

Concluding Part of Gautam Benegal’s,”One Man Show.”
This will be the concluding part of Benegal’s lovely short story.I agree,when I post a story in parts,the continuity is lost and every chance that some of my Facebook friends who write in Tamil,for whom this translation has been attempted,have missed a part or two.I would try to post all the parts once again.
தனி மனிதன் காட்சி.

நிறைவு பகுதி.பகுதி.4.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு,நான் என்னால் முடிந்த வரை தரை எல்லாம் சுத்தம் செய்தேன்.மேஜை கவரை என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.மறுபடியும் ஜன்னல் அருகில் சென்று நின்றுக் கொண்டேன்.கிளம்புமுன் அந்தப் பெண் தன் கையை நீட்டி,எங்கள் ஒப்பந்தப்படி இரண்டு ரூபாய்கள் கேட்டாள். நான் என் மேஜையில் மர ஹோமியோபதி டப்பாவில் சேர்த்துவைத்திருந்த பணத்திலிருந்து கொடுத்தேன். அந்த பணத்துக்கு எனக்கு தன் திறமையை காட்டியே தீருவேன் என்று ஏதோ சுவிட்சு போட்டது போல் தன் வாயை திறந்து ஒரு இந்தி பாடலை பாடத்தொடங்கினாள்.அது ஏதோ டிராம் திடீரென்று நிறுத்தியது போல இருந்தது. தம்பியும் தன் பங்குக்கு ஒரு ஏதோ ஒரு வாத்தியத்தை எடுத்து கூட வாசிக்கத் தொடங்கினான். அவர்கள் இருவரும் என்னுடைய ஓவியங்களை சிறிதும் கவனிக்காமல் பாடிக்கொண்டிருந்தனர்.என் பயம் பக்கத்து வீட்டிலிருக்கும் திருமதி.தாஸ் இவர்கள் பாடுவதை கேட்டுவிட்டு என் தாயிடம் கூறிவிட போகிறாறே என்பது.அவர்கள் நிறுத்தியவுடன் நான் மிகவும் நன்றாக இருந்ததாகச்சொல்ல,என்னை திரும்பிக்கூட பாராமல் அவர்கள் சென்றனர்.

நான் எனக்காக ஒரு சீஸ் சான்ட்விச் செய்துக் கொண்டு அதை முழுங்கினேன்.எனக்காக வைத்திருந்த சாதமும்,தாலும் சுட வைத்து சாப்பிட நேரமாகும்.வெய்யில் வெளியே கொளுத்திக் கொண்டிருந்தது.மெயின் ரோடில் ஒரு மாடி பஸ் கிரீச்சிட்ட படி சென்றுக்கொண்டிருந்தது.ஒரு க்வாலிடி ஐஸ்கிரீம் வண்டி “ஐஸ்கிரீம் “என்று கூவியபடி சென்றது.தொலைவில் சில நாய்கள் குலைத்தபடி இருந்தன.அந்த வண்டிக்காரன் என்னை நம்பிக்கையுடன் பார்த்தான். நான் வேண்டாமென தலையை அசைத்தேன்.வானத்தைப் பார்த்தேன். இரண்டு பட்டங்கள் போட்டியிட்டபடி முன்னேறின.அவற்றில் ஒன்று அடுத்த தெருவில் இருக்கும் என் நண்பன் புல்டுவினுடையது.அப்போது கட்டையாக் ஒரு குரல் கேட்டது.

“டுடுல், உனக்கு விடுமுறையா,அல்லது சும்மா பொழுது போக்கிறாயா” 

அவர் அங்குள்ள குளிர் சாதன நிறுவனத்தில் பணிபுரியும் சஜல் அண்ணன்.அவர் என் ஜன்னலுக்கு அருகில் எப்போது வந்தார் என்று நான் கவனிக்கவில்லை.என்னை நோக்கி சிரித்தார்.அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும்.குள்ளமாக ,ஒரு சுருண்ட தாடியுடன்,வயதுக்கு மீறிய வழுக்கைத் தலையுடன் அவர் முழு பைத்தியம்.அவர் எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது.அங்கிருந்த சீதல் கோவிலின் படிகளில் பாதி பட்டினியுடன் விழுந்து கிடந்தார்.அங்கு உள்ள பூசாரி காலை நாலரை மணிக்கு அங்குள்ள காக்கைகளுக்கு உணவு அளிக்க வெளியே வரும்போது தடுக்கி விழ இருந்தார்.அவரை பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கையில் இந்த புனிதமான இடத்தில் சாக நினைத்ததற்காக வரை திட்டியபடி சிறிது பொரியும் குடிக்க நீரும் கொடுத்த பிறகு பிஷ்ணு அண்ணனின் குளிர் சாதன நிறுவனத்துக்கு அழைத்து சென்றார்.சஜல் அண்ணன் அங்கு வேலை செய்துக்கொண்டு சுற்றும் உள்ளவர்களுக்கு எடுபிடி வேலை செய்து வந்தார்.அவருடைய கடந்த காலத்தை பற்றி யார் கேட்டாலும் ஒரு வெற்றுக் பார்வையே பதிலாக கிடைக்கும்.அவருக்கு யாரோ அளித்த டோனால்ட் டக் வரைந்த டீ சர்டும் ஒரு காக்கி பான்டும் இடுப்பை சுற்றி ஒரு துண்டும் உடை.இதை தவிர வேறு உடையில், நான் பார்த்ததில்லை.அங்கு ஏதாவது சாவு நிகழ்ந்தால் அவர்தான் முதல் ஆளாக பிணம் தூக்குவராக இருப்பார்.”பாலாஹரி போல்” என்று கத்தியபடி கிளம்புவார். அங்கு திருமணம் ஏதாவது நடந்தாலும் ஓடிஆடி வேலை செய்து வரும் விருந்தினர்க்கு நீர் வழங்குவார்.

நான் “சஜல் அண்ணே,உள்ளே வாருங்கள். உங்களிடம் ஏதோ காண்பிக்க வேண்டும்.” என்றேன்.

அவர் உள்ளே நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்தார்.

“உன் வீடு நன்றாக இருக்கிறது,யாரும் இல்லையா” என்று கேட்டார்.

பிறகு அவர் தனக்கு அடக்கமுடியாமல் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றார்.நான் மிகவுடன் பெருந்தன்மையுடன் பாத்ரூமை காண்பித்தேன்.முன் கதவை திறந்தவுடன் இதுதான் முதலில் கண்ணில் படும்.உள்ளே ஏகப்பட்ட சத்தத்துடன் ,தண்ணீர் ஓசை கேட்டது.நிறைய நேரத்துக்கு பிறகு அவர் வெளியே வந்தபோது கிளினிக் சாம்பூ மணமும் யூடிகொலோன் மணத்துடனும் குளித்துவிட்டிருந்தார்.என் தாயின் சீப்பில் தலை சீவி,பாண்ட்ஸ் பவுடர் போட்டிருந்தார்.ஒரு கொட்டாவி விட்டபடி,”நான் ஒரு தூக்கம் போடுகிறேன்” என்றார்.

நான் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்து “ஆனால் நான் உங்களை ஏதோ காண்பிக்க கூப்பிட்டேன்.தூங்குவதற்காக இல்லை” 

அவர என்னிடம் கெஞ்சியபடி ” எனக்கு மிகவும் தூக்கம் வருகிறது.சிறிது நேரம் “என்றார்.

அவர் இருபுறமும் பார்த்துவிட்டு என்னுடைய மற்றும் என் அண்ணன் அறைகளையும் விட எங்கள் பெற்றோர்கள் படுக்கையறை பிடித்து போய் அவர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டு சிறிது நேரத்தில் குறட்டை ஒலியும் கேட்டது.

நான் ஃபிரிட்ஜ் மேலே உள்ள கடிகாரத்தை பார்த்தேன்.என்னுடைய இடைவேளை வேகமாக கடந்துக்கொண்டிருந்தது.இன்னும் ஒரு மணி நேரத்தில் என் தாய் வந்துவிடுவார்கள்.இந்த விருந்தாளி எனக்கு பெரிய தொந்தரவாக இருந்தார்.என் நேரம் கடந்து கொண்டிருந்தது.நான் சிறிது தவிப்புடன் தூக்கத்திலுள்ள சஜல் அண்ணனை பார்த்தேன். முடிவில் தூங்கும் அவரை எழுப்ப முயன்றேன்.”சஜல் அண்ணே,எழுந்திருங்கள். ஐந்து நிமிடங்கள் முடிந்து விட்டன.”

அவர் தூக்கத்தில் “அவர்கள் வருகிறார்கள்.அவர்கள் வருகிறார்கள்” என்றார்.

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்,இங்கு யாரும் வரவில்லை.எழுந்திருங்கள்” என்றேன்.

அவர் ஒருவித பீதியுடன் இங்கும் அங்கும் பார்த்தபடி “எல்லாவற்றையும் எறிந்து விடுங்கள். போலீஸ் .இங்கிருந்து வேகமாக் கிளம்பும் வேண்டும்” 

இப்போது எனக்கு சற்று பயமாக இருந்தது.நான் சற்று சத்தமாக அவர பெயரை கூறி அழைத்தேன்.

அவர் சற்று குழப்பத்துடன் சுற்றிப் பார்த்துவிட்டு என்னை கண்டவுடன் சிறிது சாந்தமானார்.காவியேறிய பல்களை காட்டியபடி சிறிது கோணலாக சிரித்தார்.

“வேறு யாராக இருக்கும்.நீங்கள் தூக்கத்தில் இடைவிடாது பேசிக்கொண்டிருந்தீர்கள்.வாருங்கள்.வரவேற்பறைக்கு செல்வோம்.” என்றேன். 

சஜல் அண்ணன் என்னை பின் தொடர்ந்தார்.

“நீ இந்த அறையை எவ்வளவு அழகாக அலங்கரித்திருக்கிறாய்”

நான் சற்று கருணையுடன் “இது அலங்கரிப்பு இல்லை.கண்காட்சி” என்றேன்.

அவர் சற்று வெறுமையுடன் “கண்காட்சியா”

“ஆமாம். கண்காட்சி.ஓவிய காலரி”

அவர் என்னை உற்றுப்பார்த்து விட்டு சிறிது மறதியுடன் அந்த ஓவியங்களை முதன்முறை பார்ப்பது போல பார்த்தார்.பிறகு ஏதோ மயக்க நிலையில் இருப்பது போல ஒவ்வொன்றாக நின்று பார்த்தார்.நான் அவரையே பார்த்திருந்தேன்.

“எப்படி இருக்கின்றன? உங்களுக்குப் பிடித்ததா?”

அவர் எங்கியோ ஞாபகத்துடன்,”நீ இப்போதே இப்படி வரைகிறாய்.இன்னும் பழக்கம் ஆனால் நீ வரையும் கைகள் கைகளைப்போலவும், கால்கள் கால்கள் போலவும் இருக்கும்.பிறகு….” என்று நிறுத்தினார்.

அவர கண்களை சுருக்கிக்கொண்டு தாவாவை தடவிக்கொண்டார்.

“பிறகு என்னவாகும்,சஜல் அண்ணே”? 

“பிறகு நீ இன்னும் பெரியவானவுடன்,நீ உண்மையாகவே நன்றாக வரைந்தால்,இவற்றை எப்படி வரைய வேண்டும் என்று தெரிந்துக்கொள்வாய்” 

நான் ஒரு பெறுமூச்சு விட்டேன்.அவர் ஏதோ உளறிக்கொண்டே இருந்தார்.

நான் அவரிடம் “உங்களுக்கு இந்த படங்கள் பிடித்ததா,இல்லையா” என்றேன்.

அவர் எதுவும் கூறாமல் அவர் கண்களில் ஒரு வெறுமையுடன் இருந்தார்.

நான் அவர் பெயரை சற்று உறக்க கூவினேன்.

அவர் சட்டென்று நினைவுக்கு வந்தார்.என்னைப் பார்த்து “என்ன” என்றார்.

“உங்களுக்கு”.., பார்த்தால் தன் தலையை இரு கண்களாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்து “எனக்கு தலை வலிக்கிறது” என்றார்.

நான் உதவுவதற்காக்” என் அம்மாவுக்கும் தலை வலி வரும்.ஒரு அனாசின் முழுங்கிவிட்டு படுத்துக் கொள்வார்கள்.நீங்களும் வீட்டுக்குப்போய் அதே போல் செய்யுங்கள்.” என்றேன். 

அந்த அறையை விட்டு செல்லுமுன் சுற்றும் பார்த்துவிட்டு தன் காவியேறிய பற்களுடன் சிரித்துவிட்டு ” நீ இந்த இடத்தை அழகாக அலங்கரித்திருக்கிறாய்” என்று கூறி விட்டு சென்றார்.
நான் என்னுடைய் ஓவியங்களை ஒழுங்காக அடுக்கினேன்.ரிக்‌ஷா மணி அடிக்கும் ஓசை கேட்டது.எங்கள் வீட்டின் வரவேற்பறையின் ஜன்னலருகில் நின்றவுடன் என் தாய் வந்து விட்டார்கள் என தெரிந்தது.நான் என் பெற்றோர்களின் படுக்கை அறை ஷீட்டை சரிசெய்திருந்தேன். சாப்பாட்டு மேஜையில் விழுந்திருக்கும் உணவுத் துண்டுகளையும் அகற்றி இருந்தேன்.ஆனால அன்று இரவு காலியாக இருந்த சாம்பூவும் ,யூடி கொலோனின் நறுமணமும்,சீப்பில் ஒட்டியிருந்த நரைமுடியும் எல்லோருக்கும் குழப்பத்தை உண்டாக்கியது.எல்லோரும் என்னை சந்தேகத்துடன் நோக்கினாலும் ஒன்றும் ஆதாரங்கள் இருக்கவில்லை.என் தந்தைக்கும் காலை வேலை செய்யாத ஃப்ளஷ் இப்போது எப்படி வேலை செய்கிறது என்று புரியவில்லை.சஜல் அண்ணன் அவர் திறமையை காட்டியிருந்தாலும் வளர்ந்து வரும் ஒரு ஓவியனை ஊக்குவிக்கும் ரசிகனாக இருக்கவில்லை.நான் பெருமூச்சு விட்டபடி யோசனை செய்தேன். நான் இத்தனை பாடு பட்டு செய்த ஏற்பாடுகள் எல்லாம் வீண்.சிறிதும் ஆர்வம் இல்லாத இரு குழந்தைகளும்,ஒரு மன நிலை சரியாக இல்லாதவர்களும்தான் என் பார்வையாளர்கள்.
இத்துடன் இந்த சிறுகதை நிறைவு பெறுகிறது.என் முதல் பகுதிக்கு கிடைத்த வரவேற்பு பிறகு வந்த பகுதிகளுக்கு கிடைக்கவில்லை.இது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்த போதிலும் எல்லோரும் அவரவர்கள் வேலையில் பிஸியாக இருப்பார்கள் என சமாதானப் படுத்திக் கொண்டேன்.எல்லோருமே ஏதாவது ஒரு பகுதியை தவற விட்டுருப்பார்கள்.புரிந்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
Gautam Benegal

I have finished your story in four parts.Some delay was inevitable due to my limitations.I hope I have done some justice to your beautiful story.

Advertisements

One Man Show.Part 3.

Continuing with my translation of Gautam Benegal’s short story,”One Man Show”, this is the third part.

To give a short recap,in the first two parts,we have seen how a young boy’s painting of a “ferocious” lion is made an object of ridicule by his drawing teacher.All the same,He receives encouragement from his father,a famous artist by himself and his mother.

In the second part the boy thinks hard on how to get a realistic and correct assessment of his artistic abilities.He knows his parents would never discourage him.Outsiders can’t really be judges.He has his ideas and prepares the ground for putting up a show. Now to the third part.
தனி மனிதன் காட்சி

பாகம் 2.

முதல் இரண்டு பாகங்களில் நாம் பார்த்து,எப்படி ஒரு சிறுவனை அவன் டிராயிங் மாஸ்டர் அவன் வரைந்த ஓவியத்தை இழிவாக பேசி அவனை அலட்சியப்படுத்துகிறார் ,அவன் வீட்டில் அவன் தந்தை,ஒருபுகழ் பெற்ற ஓவியராக இருந்த போதிலும் ,அவனை உற்சாகப்படுத்துகிறார் 

அவன் தாயும் அவனிடம் பரிவுடன் பேசுகிறார் .

அடுத்து அவனுக்கே அவன் திறமையில் சந்தேகம் வருகிறது. எல்லாவற்றையும் யோசித்து,ஒரு முடிவுக்கு வருகிறான். அடுத்த நாள் எல்லாரும் வீட்டை விட்டு போன் பிறகு தன் தனி மனிதன் கண்காட்சிக்கு வீட்டை சுத்தம் செய்து இன்னும் நான்கு ஓவியங்கள் வரைந்து தயாராக ஜன்னல் அருகில் நின்றுக்கொள்கிறான்.இப்போது மூன்றாம் பகுதி.
முதலில் நான் பார்த்தது,ஒரு சிறுவனும்,அவன் சகோதரி இருவரும்,இரண்டு கல்களை வைத்து தாளம் போட்டபடி,ஏதோ சோக பாட்டை பாடியபடி வந்துக்கொண்டிருந்தனர்.

நான் அவர்களை அருகில் வரச்சொல்லி அழைத்தேன்.

அவர்கள் அருகில் வந்தார்கள்.அந்த சிறுவனுக்கு ஐந்து வயதிருக்கும். என்னை நோக்கி கையை நீட்டினான். அவன் அக்கா என்னிடம் “நான் பாட வேண்டுமா” என்று கேட்டாள்.

நான் உடனே “பாட்டா? வேண்டாம். உள்ளே வாருங்கள். நான் ஏதோ காண்பிக்க வேண்டும்” என்றேன்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர் .அக்கா சந்தேகத்துடன் “ஏன் உள்ளே வர வேண்டும்? இங்கேயே பண்ம் கொடுக்கலாமே.” என்றாள்.

நான் சற்று விஷமத்துடன் “எல்லாமே வீட்டினுள் இருக்கிறது.உள்ளே வாருங்கள்.”

அந்த சிறுவன்”உன்னால் எவ்வளவு கொடுக்க முடியும்” என்றான்.

அவன் முகம் அழுக்காக,பேச்சு சற்று திக்குவாயாய் இருந்தது. இருவரது முடியும் செமட்டையாக,பிசுக்காக இருந்தன.

அந்த சிறுமி சட்டென்று உஷாராக “எங்களுக்கு இரண்டு ரூபாய் கொடுத்தால்தான் நாங்கள் உள்ளே வருவோம் ” என்றாள்.

நான் சற்று பொறுமை இழந்தேன்.நேற்று நான் ஒரு மக்கள் விரும்பும் ஓவியனாக வேண்டும் என்று கற்பனை செய்தபோது இது மாதிரி ஒரு விருப்பமில்லாத ரசிகர்களை எதிர்பார்க்கவில்லை.மிகவும் பணக்கார்ர்களாக,முட்டாள்தனமான ரசிகனாக இல்லாமல்,தினக்கூலிக்காக உழைக்கும் ஒரு உண்மையான உழைப்பாளி,அவன் ரத்தம்,வேர்வை,அவன் கண்ணீர்,இவற்றைதான் நேற்று என் கண் கண்டிருந்தன.அவர்களை கட்டிக்கொள்ள இருந்தேன்.இந்த பெண் பணத்தை பற்றி பேசி அதை கெடுத்துவிட்டாள்.
“உன்னிடம் கடவுள் படங்கள் இல்லையா “அந்த பெண் சுற்றுமுற்றும் பார்த்தபடி கேட்டாள்.நான் அடுத்த முறை சிலவற்றை வரைய வேண்டும் என்று எண்ணியபடி,”இல்லை” என்றேன்.

அந்த சிறுவன் “சாப்பிட ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” 

நான் அவனிடம் பசிக்கறதா என்று கேட்டவுடன் ஆமாம் என்றான்.

அந்த சிறுமி “நாங்கள் நேற்று இரவிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.எனக்கும் பசிக்கிறது.” என்றாள்.

நான் ” சிறிது பொருத்துக்கொள்.நான் ஒரு நொடியில் வருகிறேன்.அதற்குள் என் ஓவியங்களை பார்த்துக் கொண்டிருங்கள்” என்றேன்.

நான் ஃபிரிட்ஜிடம் சென்று சிறிது பிரட், வெண்ணை,ஒரு ஸலாமிரோல் எடுத்துக்கொண்டு இது உண்மையாகவே சிறந்த விருந்து,என்று எண்ணியபடி திரும்பினால் அவர்கள் இருவரும் என்னைத் தொடர்ந்தபடி வந்திருந்தனர்.

நான் அவர்களிடம் கோபமாக,”நீங்கள் என் ஓவியங்களைத்தானே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.” என்றேன்.

“எனக்கு தாகமாக இருக்கிறது”

நான் ஃபிரிட்ஜிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு எல்லாவற்றையும் டேபிளில் எடுத்து வைத்தேன்.நான் ஸ்லாமி ரோலை எடுத்து பெரிய துண்டுகளாக வெட்டுவதையும்,பிரட்டில் வெண்ணை தடவுவதையும் அகன்ற கண்களுடன் வியப்புடன் பார்த்தபடி இருந்தாள்.

அது என்ன என்று கேட்டாள்.

“ஸலாமி,உனக்கு பிடிக்கும்” என்றேன்.

அவள் அதை கடித்தபடி “இது எதை கொண்டு செய்திருக்கிறார்கள்”

“பன்னி மாமிசம்” பிடித்ததா”

அவள் தொண்டையில் அடைத்திருந்ததை தரையில் துப்பியபடி “உவே”, அவள் துப்பியது பிரட் ,வெண்ணை தவிர என் தாயின் சினேகிதி கேன்பராவிலிருந்து வாங்கி வந்திருந்த டேபிள் க்ளாத் மேலெல்லாம் ஆகியிருந்தது.

அவள் தன் தம்பியை கட்டிபிடித்தபடி “நீ எங்களை கொல்லப்பார்க்கிறாயா?உன் ஜாதி என்ன?”

எனக்கு குழப்பமாக இருந்தது.”அதனால் என்ன ஆயிற்று? உனக்கு பிடிக்காது என்றால் முன்னாலேயே கூறி இருக்க வேண்டும்.இதோ பார். இங்கு எவ்வளவு அசுத்தம் செய்திருக்கிறாய்.என் தாய்ப் பார்த்தால் என்னை கொலையே செய்வாள்.நீ சாப்பாட்டை விட்டெறியக்கூடாது.எவ்வளவு ஆயிரம் ஏழை மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.ஜாதி வேறுபாடு நல்லதில்லை.எல்லோரும் சம்மானவர்கள்” என்றேன்.

அந்த சிறுமி என்னை ஒரு பீதியுடன் பார்த்தாள்.”நீ கிருவஸ்துவனா? நீ மாட்டை சாப்பிடுவியா?” என்றாள்.

திடீரென்று வெட்கத்துடன் அவள் முக பாவம் மாறியது.அத்துடன் சிறிது கொஞ்சலாக,தன் கிழிந்த ஃபிராக்கை இங்கும் ஆட்டியபடி “நீ சாப்பிட ஏதாவது கொடுப்பதாக கூறினாய்.நீ நல்ல பையன் அல்லவா,எங்களுக்கு நல்லதாக ஏதாவதுகொடு” என்றாள்.

நான் ஃபிரிட்ஜ் பின்னாலிருந்து நேற்று இரவு மீதி இருந்த ரொட்டியும்,சிறிது காயும் கொடுத்தேன். அவர்கள் இருவரும் அவற்றை வாயில் அடைத்துக் கொண்டு காயையும் அள்ளி சாப்பிட்டார்கள். பிறகு கை கழுவாமல் சட்டையிலேயே கைகளை துடைத்து கொண்டார்கள்.அவன் ஒரு ஏப்பம் விட்டபடி,அதே கைகளுடன் தண்ணீர் பாட்டிலை எடுக்கப் போனான்.நான் அவனை தடுக்க சென்ற போது அவன் அதை பொருட்படுத்தாமல் அவன் அக்காவை பார்த்தபடி அவன் சட்டையெல்லாம் கொட்டிக்கொண்டு வாயெல்லாம் வழிய குடித்தான்.அவள் அவனை பார்த்து சிரித்தாள்.

அந்த சிரிப்பு எனக்கு என் தாயை நினைவூட்டியது.

என் முகநூல் அன்பர்களுக்கு,
My first translation from English to Tamil was Gautam Benegal’s son Anand Benegal’s post based on a real life incident.That was in the last week of December,2015 and my second translation was also from Gautam Benegal’s collection of short stories and the name was “Bread Hunters”. Once again this story “One man show” is also from the same collection of short stories “1/7,Bondel Road,an endearing short story collection”.
Gautam Benegal needs no introduction.He has too many talents to list.Most of my shares in my timeline,would be his cartoons,one liners ,sketches and paintings or his incisive posts.One of his many accomplishments is he is a very good story teller and he illustrates his stories also.I am translating his story but cannot reproduce his illustrations “in mixed media with charcoal,crow quill pen and ink on wet paper with a wash”,.I knew these terms only after reading his posts and sketches.
I am translating and posting this story in parts.It is a fairly long story and with my limited capacity in Tamil typing,I need some gaps in between parts.Now to the story.
கௌதம் பெனீகல் என் நல்ல நண்பர்களில் ஒருவர். பல திறமைகளைக்கொண்டவர் .நல்ல எழுத்தாளர்.தேசீய விருது பெற்ற அனிமேசன் பட ம் எடுத்தவர்.கார்டூன்களும் ஆயில் பெய்ன்டிங் வரைபவர்.இதற்கு முன் இவரது ஒரு சிறு கதையை மொழி பெயர்த்து இருக்கிறேன்.இதில் சில தவறுகள் இருக்கலாம். சில சொற்களுக்கு எனக்கு சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை.இக்கதை சிறிது பெரியதாக இருப்பதால் சில பாகங்களாக பிரித்திருக்கிறேன்.
One Man Show.

தனி மனிதனின் காட்சி.
“உன் சிங்கத்துக்கு ஏன் மனிதக் கண்கள் இருக்கின்றது? இது தவறு” திரு.பெரெய்ரா கையில் பெருவிரலுக்கும்,ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் ஒரு கரப்பான் பூச்சியை பிடித்திருப்பது போல் என் டிராயிங் பேப்பரைப்பிடித்திருந்தார்.அவர் தன் உதடுகளை இருக்கமாக் மூடிக்கொண்டு யாரோ அவர் வாயில் குப்பையைத் திணிப்பது போல் வைத்திருந்தார்.அவர் வெறுப்புக்கு காரணம் நான் வரைந்த ஒரு சிங்கத்தின் படம்.அந்த சிங்கம் காவி நிறமும் காஃபி கலரும் சேர்த்து வரைந்து,பச்சை நிறம் கொண்ட ஒரு உயர்ந்த புல் வெளியில் மஞ்சள் நிற வானத்தின்கீழ் நின்றிருந்தது.திரு. பெரெய்ரா “இந்த சிங்கம் சைவமா”என்றார்.நான் “இல்லை” என்றேன். 
“இது ஆக்ரோசமான சிங்கம்” என்று பெரெய்ராவிடம் கூறினேன்.அவர் ஒரு பொருமலலுடன் என் டிராயிங்க் புக்கை என் டெஸ்க்கில் விட்டெறிந்தார்.”இது ஏதோ பஸ்ஸுக்காக காத்திருப்பதைப்போல் இருக்கிறது” என்று கூறி விட்டு லூக் ஓ லியரின் டெஸ்க் அருகில் சென்றார்.அவனுடையது நான் வரைந்தது விட சற்று நன்றாக் இருந்தது.அவனுடைய ஓவியத்தில் ஒரு ப்ரவுன் குடிசை,அகன்ற கதவுடன் ,இரு புறமும்இரண்டு சதுர ஜன்னல்களுடன் இருந்தது.அந்த குடிசையின அருகே நீல நிற ரிப்பன் போல ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது.இதற்கு முன் புறம் அழகான பல் வரிசை போல் தூய்மான பச்சை நிற புல்வெளி வரையப்பட்டிருந்தது.வானம் நல்ல நீலநிறமாக இருந்தது.இது நடுவில் சற்றே கீறலாக மஞ்ச நிற சூரியன் தென்பட்டது.கோடுகள் அழகாக வரைய பட்டு ,நிறங்கள் அதற்குள் அழகாக பொருந்தி இருந்தது.திரு.பெரெய்ரா சற்று சிரித்துவிட்டு அவனிடம் மிகவும் நன்றாக இருப்பதாக கூறி விட்டு அவன் டிராயிங்கை நீட்டினார்.லூக் சிரித்துக்கொண்டு அவன் சட்டை ஸ்லீவ்ஸில் மூக்கைத் துடைத்துக்கொண்டான்.நாங்கள் அனைவரும் அவனை சற்று பொறாமைய்டன் பார்த்தோம்.சிலர் அவன் வரைந்திருந்ததைப பார்க்க சென்றார்கள்.
அன்று மாலை என் தந்தைக்கு மிகவும் கோபம் வந்து கத்தினார்.அவர் என் டிராயிங்கில் கை வைத்து கோபமாக கேட்டார்.”இதில் என்ன தவறு இருக்கிறது?நம் கிராமீய வரைபடங்களில் மிருகங்களை வரையும்போதும்,பண்டை கால எகிப்திய மற்றும் சுமேரிய கலை வல்லுனர்களிடமும் இதைப்போல காணலாம்.போய் அவரிடம் கூறு.யார் அவர் ? அவர்பெயர் என்ன என்று கேட்டார்.பெரெய்ராவா,கேள்விப்பட்டதும் இல்லை.அவர் என்ன ஓவியரா?”என் தந்தையின் முகம் கோபத்தில் இன்னும் சிவந்தது.இதில் உண்மை என்னவென்றால் திரு.பெரைய்ரா ஓவியரும் இல்லை.சொல்லப்போனால் எதுவுமே இல்லை.எப்போதெல்லாம் யாராவது லீவிஸ் போனால் அவர்ஓவிய வகுப்பு மட்டுமில்லாமல் கேம்ஸ் டீச்சர்,ஆங்கில இலக்கண டீச்சர்,சில சமயங்களில் வங்காள வகுப்பு டீச்சர்.(இதில் அவருக்கு வங்காள மொழியே தெரியாது.)ஏதோ சில வசைமொழிகளே தெரியும்.அவருக்கு பிரியமான வசைமொழி 4ஏ வகுப்பில் சென்று “ஔரா பிரிட்ஜிலிருந்து குதித்து விடு” என்பதுதான்.இல்லாவிட்டால் தன் பெல்டை கழற்றி எங்களை அடிப்பார். அவரிடம் சென்று நான் ” சார்,எகிப்திய மற்றும் சுமேரிய ஓவியங்களை பாருங்கள் ” என்று கூறினால் நான் மறைந்துக்கொள்ள ஒரு இடம் தேட வேண்டும்.

என அண்ணன் என் தந்தையிடமிருந்து என் ஓவியத்தை வாங்கி”இது சிங் கம் போலவே இல்லை.ஸீல் போல இருக்கிறது.அதன் மூக்கு நுனியில் ஒரு சிவப்பு பந்து வரைந்திருக்க வேண்டும். என்றான்.

“நான் அது ஆக்ரோசமான சிங்கம் “என கத்தினேன்.” நீதான் கூற வேண்டும்” என்று கேலியுடன் கூறினான். என தாய் நடுவில் வந்து “இது ஒரு அழகான சிங்கம்” என்று தேனொழுக கூறினாள்.என் அண்ணன் முறைத்தான்.இது எனக்கு நன்றாகத் தெரிந்த பார்வை.”ஒழுங்காக இரு,குழந்தையை ஊக்கப்படுத்து” என்பது. நான் முட்டாள் இல்லை.என் தந்தை கருணையுடன் “ரொம்ப தத்ரூபமாக இருக்கத்தேவையில்லை,உன் உள் ளத்திலிருந்து வந்தால் போதுமானது” என்றார்.
( தொடரும்)

One Man Show.Part 2.

As I wrote earlier,this short story is from a collection of short stories by Gautam Benegal,titled “1/7, Bondel Road”.These are impressions created on a young boy by events and memories around him.It describes a typical middle class area in an important and “quintessential “Calcutta lane,as it was in the seventies.To quote from the blurb “A sharply divergent set of stories,that end with inevitably poignant,unexpected turns that give old truths new meaning.”. 
கௌதம் பெனீகலின் சிறு கதைகள் தலைப்பு.1/7, பன்டேல் தெரு.இக்கதைகள் ஒரு சிறுவனின் அனுபவங்களையும் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் அவன் பார்வையில் பழைய ஞாபகங்களைப்பற்றி எழுதப்பட்டிருக்கறது. தென் கல்கத்தாவின் ஒரு முக்கியமான பகுதியில்70 களில் ஒரு சாதாரணமான மத்திய வகுப்பின் வாழ்க்கை முறையையும் விவரிக்கிறது.
தனி மனிதன் காட்சி.

பகுதி.2.

அன்று இரவு நான் என் கொசு வலைக்குள் படுத்துக்கொண்டு,என்னைச் என் சுற்றி கொசுக்கள் ரீங்காரமிட்டப்படி இருக்க நான் இதைப்பற்றி விவரமாக சிந்தித்தேன்.எனக்குள் பல விதமான உண்மைகள் சுற்றி வந்தன.முதலாவது என்னை சுற்றி இருப்பவர்களிடமிருப்பவர்களிடமிருந்து என் ஓவியத்திறமையைப்பற்றி உண்மை தெரியப்போவதில்லை.ஒரு வேளை திரு. பெரேய்ரா சொல்வதுதான் உண்மையோ என்னவோ.என் பெற்றோர்கள் என் திறமையை என்றும் குறைவாக மதிப்பிட மாட்டார்கள்.என் படங்கள் உண்மையாகவே மட்டமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறினால் என் குழந்தை பருவத்தில் பாதிப்புகள் வரும் என்று நினைத்தார்கள்.என் அண்ணன் பைபிலில் வரும் கேய்ன் போல.உண்மையைக் கூற வேண்டுமென்றால் நான் என் ஓவியத்தைச் தூக்கிக்கொண்டு தெருவில் போகும் மனிதர்களைக் கேட்டால் அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.அது சாமர்த்தியமானது அல்ல.ஒரு ஓவியத்தை அனுபவிக்க அதை கண்ணாடியில ஃப்ரேம் செய்து சிறிது தூரத்திலிருந்து பார்க்க வேண்டும்.அதற்குப்பிறகு “ஆஹா.என்ன படைப்பு.,எத்தனை அழகு,என்ன ஸ்டைல்,இது அவர் ப்ளூ பிரியட்டில் வரைந்திருப்பார் போல,” இப்படி எதையாவது கூறி விட்டு அங்குள்ள விசிட்டர் புத்தகத்தில் “மிகவும் சிந்தனையைக் தூண்டக்கூடியது,மற்ற ஓவியங்களிலிருந்து மிகவும் மாறுபட்டு வரையப்பட்டிருக்கறது.” என்று எதையாவது எழுதிவிட்டு போவார்கள்.
நான் அப்படித்தான் என் குடும்பத்துடன் ஓவிய அகாடமி வளாகத்தில் என்தந்தையின் நண்பருடைய ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.அவர் ஓவியங்களில் நிறைய மனிதர்களை நிர்வாணமாக வரைந்து பச்சை,மஞ்சள் மற்றும் நீல கண்கள்,காதுகள்,கைகள் ,காதுகள். உடம்பில் எல்லா இடமிருந்தும் முளைப்பது போல வரைந்திருந்தார்.அவரது ஓவியம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால் விசிட்டர்புக் நிறைந்திருந்தது.கிளம்பும் போது என் அண்ணன் அதில் “enjoyed the cubist undercurrent in your work” என்று எழுதிவிட்டு மிக்க பெருமிதத்துடன் எழுதி கையிழுத்திட்டான்.(மன்னிக்கவும்,இதை மொழி பெயர்க்கத் தெரியவில்லை.).
அடுத்த நாள் வியாழக்கிழமையாதலால் எனக்கு விடுமுறை.என் அண்ணன் அதே பள்ளிக்கூடத்தில் படித்ததால் அவனுக்கும் விடுமுறை.அவன் சினேகிதனைப் பார்க்க சென்று விட்டான்.என் தந்தை அவர்ஆபீஸுக்கும், என் தாய் அவர் வேலை செய்யும் பள்ளிக்கும் சென்று விட்டனர்.எங்கள் வீட்டில் பணி புரியும் அம்மாவும் வரமாட்டார்கள்.நான் தனியாக இருந்தேன்.என் பாதை கிளியராக இருந்ததால் நான் வேலையை ஆரம்பித்தேன்.என்னிடம் நான் வரைந்ததிலேயே சிறந்ததாக பன்னிரண்டு ஓவியங்கள் இருந்தன.நானே என் ஓவியங்களின் சிறந்த விமர்ச்சகனாகவும் இருந்ததால் எனக்கு நன்றாக இல்லை என்று தோன்றியவைகளை நானே கிழித்து விட்டெறிந்துவிட்டேன்.இப்போது பன்னிரண்டு ஓவியங்கள் இருந்தன.இவை குறைவாக தோன்றியதால் இன்னும் சில ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன்.மூன்று மணி நேரத்தில் சில வர்ணங்கள் கலந்து நான்கு ஓவியங்கள் தயார் செய்தேன்.
வரவேற்பறையில் இரண்டு பிரம்பு சோஃபாக்கள் ஒன்றையொன்று பார்த்தபடி போடப்பட்டிருந்தது.இது தவிர ஒரு சோஃபா அகம் பெட் இருந்தது.தெருவை பார்த்தபடி ஒரு ஜன்னல் இருந்தது.அதன் அடியில் ஒரு மேஜையில் என் தந்தையின் ஓவிய சாமான்கள் இருந்தன.அதன் அருகில் அவர் வரையும் பலகை இருந்தது.நான் அந்த அறையை சற்று ஒழித்தேன்.சோஃபா கம் பெட்டை சற்றும் சுருக்கமில்லாமல் செய்து விட்டு அங்கிருந்த குஷன்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்துவிட்டு பலகையை தூசி தட்டினேன்.அங்கிருந்த எல்லா விளக்குகள் எல்லாவற்றையும் எறிய விட்டேன்.சுற்றி ஒரு முறை பார்த்தேன். அங்கிருந்த சிங்கம் மனித கண்களுடன் சோகமாக பார்த்தது.அங்கிருந்த சில ஓவியங்கள் இன்னும் ஈரமாக இருந்தன. இரண்டு மணி ஆகி இருந்தது. நான் விரைந்துச் சென்று ஜன்னல் அருகில் என் இடத்தில் நின்றுக்கொண்டேன்.

( தொடரும்) 

பி.கு. எங்கெல்லாம் சரியான தமிழ் சொல் கிடைக்கவில்லையோ அங்கு ஆங்கிலத்தையே உபயோகித்திருக்கிறேன்.